தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிறார் இல்லத்தில் 6 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுவர் இல்லத்தில் இருந்த மேற்பார்வையாளர் 6 சிறுவர்களை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர், மேலும் வேறு ஏதும் சிறுவர்கள் யாரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் குற்றம் அரங்கேறிய சிறுவர் இல்லத்தில் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


