‘நான் நிறைய சம்பாதிக்க வேண்டும்’… மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் பாஜக அதிர்ச்சி

நடிப்பை தொடர விரும்புவதால் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்று அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

கேரளா மாநிலம், திரிச்சூர் தொகுதி எம்.பியாக இருப்பவர் சுரேஷ் கோபி. மலையாள திரையுலகின் பிரபல நடிகரான இவர், தமிழில் சரத்குமார், அஜித் உள்பட பலருடன் இணைந்து நடித்துள்ளார். பாஜகவை சேர்ந்த இவருக்கு கேரளாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. திரிச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து மத்திய அமைச்சரவையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைக்கான இணை அமைச்சராக சுரேஷ் கோபி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் கண்​ணூரில் நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார். இந்த ​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி கலந்து கொண்டு பேசுகையில், ” நான் ஒருபோதும் அமைச்​ச​ராக ஆசைப்​பட்​ட​தில்​லை. அமைச்​ச​ரான பிறகு எனது சினிமா வரு​மானம் கணிச​மான அளவில் குறைந்​துள்​ளது. எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்​சர் பதவி​யில் இருந்து விலக விருப்​பம் தெரி​வித்​துள்​ளேன். உண்மையில் நான் நடிப்பை தொடரவே விரும்புகிறேன்.

அமைச்​சர் பதவி​யில் இருந்து என்னை நீக்​கிய பிறகு சதானந்​தன் மாஸ்டரை அமைச்​ச​ராக்க வேண்​டும் என்று நான் இங்கே மனதா​ரக் கூறுகிறேன். இது கேரள அரசி​யல் வரலாற்​றில் ஒரு புதிய அத்​தி​யாய​மாக மாறும் என்று நம்​பு​கிறேன்” என்றார். பொது வெளியில் அமைச்சர் பதவியை விட்டு விட்டு நடிக்கப் போகிறேன் என்று சுரேஷ் கோபி கூறியதால், பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *