தற்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் சூழலில் அந்தக் கட்சியை அதிமுகவும், பாஜகவும் தங்களை கூட்டணியில் இணையுமாறு மாறி, மாறி இரகசியமாக தூது விடுகிறார்கள். தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து பொங்கல் முடியட்டும் பிறகு பார்த்துக்கலாம்..! என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் போட்ட அரசியல் திட்டம்
தமிழகம் முழுவதும் சுறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்க திட்டமிட்டு இருந்தார் தவெக தலைவர் விஜய். தான் கலந்து கொண்ட அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஆளுங்கட்சியை தாக்கி பேசுவதில் மட்டுமே குறியாக இருந்தார். அது அவருக்கு மக்கள் மத்தியில் சரிவையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டு, திருச்சியில் தொடங்கி விஜய்யின் சுறாவளி சுற்றுப்பயணம் கரூரில் முடிந்தது. காரணம், கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு தவெக தலைவர் விஜய் தரப்பிலிருந்து அரசியல் குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

தலைமறைவான நிர்வாகிகள்:-
கரூர் சம்பவம் குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியாமல் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கூட்டணிக்கு இழுக்கும் அதிமுக, பாஜக :-
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிமுக கட்சியும்; பாஜக கட்சியும் மாறி, மாறி தங்கள் கூட்டணியில் இணையுமாறு விஜய் தரப்புக்கு தூது விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். “பொங்கல் முடியட்டும், அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம்..! என்று விஜய் தரப்பில் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
“ஜனநாயகன்” படம் பாதிக்கக் கூடாது!
காரணம், பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் விஜயின் “ஜனநாயகன்” படம் வெளியாக உள்ளது. அதனால் அவர் அமைதியாக இருக்கிறார் என்றும் இப்போது கூட்டணி குறித்து ஏதேனும் அறிவித்தால் தன் படத்திற்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும் என்பதற்காக பொங்கல் வரை விஜய் காத்திருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.


