பிரபல நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன் பின் இவர் டான், பிரதமர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு? கன்னட படங்களிலும் நடித்து வருகின்றார். பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டரிலேயே பிரியங்கா மோகன் நடித்து வந்தார். இந்த நிலையில், அண்மையில் பவன் கல்யானுக்கு ஜோடியாக தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்த படத்தில் அவர் முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதைக்கண்டு பிரியங்கா மோகனின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் விளக்கமளித்துள்ளார். அதில், “என்னைத் தவறாக சித்தரிக்கும் வகையில் சில ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொய்யான காட்சிகளைப் பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். ஏ.ஐ நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


