தீயாய் பரவும் நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச படங்கள்!

பிரபல நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டாக்டர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதன் பின் இவர் டான், பிரதமர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு? கன்னட படங்களிலும் நடித்து வருகின்றார். பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டரிலேயே பிரியங்கா மோகன் நடித்து வந்தார். இந்த நிலையில், அண்மையில் பவன் கல்யானுக்கு ஜோடியாக தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவர் முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின. இந்த நிலையில், நடிகை பிரியங்கா மோகனின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இதைக்கண்டு பிரியங்கா மோகனின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் விளக்கமளித்துள்ளார். அதில், “என்னைத் தவறாக சித்தரிக்கும் வகையில் சில ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொய்யான காட்சிகளைப் பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். ஏ.ஐ நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *