“புதுயுகம்” தொலைக்காட்சி, இளைஞர்களுக்கான மாபெரும் “பேச்சுப் போட்டியை தமிழகம் முழுவதும் நடத்துக்கிறது”.
தலைப்பு :-
“தமிழோடு உறவாடு..” (இளையோருக்கான பேச்சுப் போட்டி)

விதிமுறைகள் :-
- போட்டியாளர் நவம்பர்-1,2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவோ, 25 வயதுக்கு மிகாதவராகவோ இருக்க வேண்டும். (வயது 18-25)
- கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் உரையை காணொளியாகப் பதிவு செய்து 9944014707 இந்த வாட்ஸப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
- காணொளியில், உங்கள் பெயர், தாய், தந்தை பெயர், ஊர், வயதைக் குறிப்பிடவும்.
- குறைந்தது 2 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 3 நிமிடங்கள் வரை பேசலாம்.
- காணொளிப் பதிவை, அலைபேசியை கிடைமட்டமாக வைத்து [Horizontal] மிகத் தெளிவாக, இரைச்சல் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
- எடிட்டிங் செய்யாமல், பதிவு செய்ததை அப்படியே அனுப்ப வேண்டும்
- உங்கள் உரை, இதற்கு முன் எந்த வடிவத்திலும் எதிலும் வெளிவந்ததாக இருக்கக்கூடாது.
- காணொளியை, இந்த மாதம் 26ஆம் தேதி (26.10.2025) வரை அனுப்பலாம்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
தலைப்புகள்:
ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து, தலைப்பைக் குறிப்பிட்டுப் பேசவும்.
1. எவ்வாறெல்லாம் சமூக ஊடகங்கள் என்னை வளைக்கிறது?
2. நான் திரைப்பட இயக்குநரானால்…
3. அலைபேசி இல்லாத ஒரு நாளில் நான்…
வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை :- 1,00,000/ (1 லட்சம்)
நடுவர்கள் :-
- செல்வேந்திரன் (எழுத்தாளர்/ பேச்சாளர்)
- ஞானசம்பந்தம்
(நடிகர்/ பட்டிமன்ற நடுவர்) - முத்துக்குமரன் (பேச்சாளர், பிக்பாஸ் வின்னர்)


