மதுரையில் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமானக கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகி உள்ளது. இதனை முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைக்கிறார்.
வேலம்மாள் கிரிகெட் ஸ்டேடியம்
மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் “வேலம்மாள் கல்வி குழுமத்தின் சார்பில்” 1 ½ ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் தமிழகத்தின் 2வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.
மைதானத்தின் வசதிகள்:
சென்னை கேப்பாக்கம் ஸ்டேடியம்; பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் ஆகிய கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு நிகராக, உலகத்தர அளவில், “மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம்” உருவாக்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் தங்குவதற்கு ஒய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, மருத்துவ வசதி என பல வசதிகள் உள்ளன.
மேலும் மழை பெய்தால் உடனே மழை நீர் வடிவதற்கு தலையில் இருந்து 5 அடி கீழே மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏகப்பட்ட சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு வசதிகளும் உள்ளன. மிகப்பெரிய அளவில், கார் பார்க்கிங் வசதிகளும் உள்ளன.

மதுரை அதிருது :-
மிக, மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த கிரிக்கெட் மைதானத்தால், மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதி ஒரு சுற்றுலாத்தலமாக மாறும் என தெரிகிறது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தில் டி.என்.பி.எல் (TNPL) தொடர், ஐபிஎல் (IPL) தொடர், ரஞ்சிக் கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
சும்மா 20,000 பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. முதற்கட்டமாக 7,000 பேர் அமரக்கூடிய வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சில கிரிகெட் போட்டிகளை “மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில்” நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடிக்கணக்கில் தயாராகியுள்ள இந்த மிகப் பிரம்மாண்டமான மதுரை வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று திறந்து வைக்கிறார்.


