‘சுழல் நாயகி’க்கு டிஎஸ்பி பதவி : யோகி அரசு போட்ட உத்தரவு

உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார்.

சாதித்த சூழல் வீராங்கனை

நடந்த முடிந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தொடர் நாயகி வருது

இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தொடர் நாயகி விருதையும் வென்றார்.

டிஎஸ்பி (DSP) பதவி :-

இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த வீராங்கனைகளை, அந்தந்த மாநில அரசுகள் கௌரவித்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமைமிகு வீரர் திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து கெளரவிப்பதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாராட்டுகளும்; கோரிக்கையும்

உத்தர பிரதேச மாநில அரசின் இந்த அறிவிப்பு பல விளையாட்டு வீரர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடனுக்குடன் ஊக்கத்தொகையும், அவர்களுக்கான கௌரவமும், அரசுப்பணியும் உடனே வழங்குவது மிக சிறந்தது என விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

Related Posts

மகளிர் உலகக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை- பிரதமர் மோடி வாழ்த்து!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.அந்த அணிக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர்…

பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஆப்கானிஸ்தான் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *