உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகச்சிறப்பாக விளையாடிய, இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த தீப்தி சர்மாவுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவி வழங்கப்படுவதாக உத்தரப் பிரதேச டிஜிபி அறிவித்துள்ளார்.
சாதித்த சூழல் வீராங்கனை
நடந்த முடிந்த மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியது.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி சர்மா, 212 ரன்கள் குவித்து 22 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
தொடர் நாயகி வருது
இறுதி ஆட்டத்தில் 58 ரன்கள் விளாசிய தீப்தி சர்மா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், தொடர் நாயகி விருதையும் வென்றார்.

டிஎஸ்பி (DSP) பதவி :-
இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்த வீராங்கனைகளை, அந்தந்த மாநில அரசுகள் கௌரவித்து வருகிறார்கள். அந்த வகையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் திறமைமிகு வீரர் திட்டத்தின் கீழ், தீப்தி சர்மாவை காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமித்து கெளரவிப்பதாக அம்மாநில காவல்துறை தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாராட்டுகளும்; கோரிக்கையும்
உத்தர பிரதேச மாநில அரசின் இந்த அறிவிப்பு பல விளையாட்டு வீரர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடனுக்குடன் ஊக்கத்தொகையும், அவர்களுக்கான கௌரவமும், அரசுப்பணியும் உடனே வழங்குவது மிக சிறந்தது என விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.



