குழந்தைகளுக்கு இனி இருமல் மருந்து வேண்டாம்? காரணம் இதுவா? – மத்திய அரசு

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து (சிரப்) கொடுக்க வேண்டாம் என மாநில அரசுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான இருமல் மருந்து மத்திய பிரதேசத்தில் சில குழந்தைகளின் இறப்புக்கு காரணமானதாக கூறப்பட்ட நிலையில், இந்த இருமல் மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன இதைப்பற்றி விரிவாக பார்ப்போம்!

இருமல் மருந்து தான் காரணமா..?

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 9 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் குழந்தைகள் ஒரே மாதிரியாக சிறுநீரக பாதிப்பால் உயரிழந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த பாதிப்புக்கு அவர்கள் சாப்பிட்ட இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த கோல்ட்ரப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ டிஎஸ்’ உள்ளிட்ட இருமல் ‘சிரப்’களை குடித்ததால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து

அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட் ரிப்‘ மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

குழந்தைகளுக்கு இருமல் மருந்து..?

இதையடுத்து இந்த 2 வகை மருந்துகளையும் மறு உத்தரவு வரும் வரை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, வயிறு கோளாறு என எந்த பிரச்னைகள் வந்தாலும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதன் பிறகு மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *