பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரங்களை தந்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் பட்டியலை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது. இது 2021 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கு இடையில் பெருநகரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக லக்னோ காவல்துறை கூறிய போதிலும், தேசிய குற்ற ஆவணக்காப்பக தரவு முற்றிலும் மாறுபட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலும் (கடத்தல், கொலை, பலாத்காரம்) இது முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில், லக்னோவில் குழந்தைகளுக்கு எதிரான 844 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, கடந்த 2023-ம் ஆண்டில் லக்னோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 2,902 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 790 வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. சைபர் கிரைம் மற்றும் கருக்கலைப்பு வழக்குகளிலும் லக்னோ முன்னணியில் உள்ளது. இது பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது.
அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின்படி இதுவே உண்மை. கான்பூரில் பெண்களுக்கு எதிராக 2,200 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 769 வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. 2023-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக கான்பூரில் 426 வழக்குகள், காஜியாபாத்தில் 208 வழக்குகளாகன பதிவாகியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அதிக முயற்சிகள் தேவை என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களில் லக்னோ நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது, இதில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் போலி உள்ளடக்கம் போன்ற வழக்குகள் அடங்கும். பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி இந்த வகையில் லக்னோவை விட முன்னணியில் உள்ளன. லக்னோவில் இதுபோன்ற குற்றங்களில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. என்சிஆர்பி அறிக்கையின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 31.2 சதவீதம் அதிகரித்துள்ளன என்று புள்ளி விவரம் கூறுகிறது.
இதே போல கருக்கலைப்பு வழக்குகளில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது புள்ளிவிவரங்களின்படி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருக்கலைப்புகள் உட்பட தலைநகரில் 42 கருக்கலைப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் உத்தரப்பிரதேசத்தின் தலைநகரம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. பத்து வழக்குகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை மூன்று வழக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.


