இந்திய மக்கள் அவமானகரமான முடிவை எடுக்கமாட்டார்கள்… புதின் நம்பிக்கை

இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். இப்படிப்பட்ட அவமானகாரமான முடிவுகளை இந்தியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று ரஷ்யா அதிபர் விளாடிமின் புதின் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்று தொடர்ந்து அமெரிக்கா மிரட்டி வருகிறது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வோம் என்பதை இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவுடான எரிசக்தி உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், இந்தியா- ரஷ்யாவுடான கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதனால், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் பூசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்ற வால்டாய் மன்ற நிகழ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உரையாற்றினார். அப்போது அவர்,, “இந்தியா ரஷ்யாவுடான எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். நிச்சயமாக, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். எனவே, அவமானகாரமான முடிவுகளை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்.

ரஷ்யாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்கா வாங்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு ரஷ்யாவில் இருந்து சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய யுரேனிய விநியோகம் இருக்கும். அது அடுத்த ஆண்டு 800 மில்லியனுக்கும் அதிகமாக கூட இருக்கலாம். அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அது லாபகரமானது, அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். இந்த விநியோகங்களை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் தொடர நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

Related Posts

ஷாக்…ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து தரையில் விழுந்து 5 பேர் பலி!

ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர்…

மகப்பேறு மருத்துவமனையில் 460 பேர் படுகொலை…துணை ராணுவப்படை வெறிச்செயல்

மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *