தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (டிஎன்எஸ்டிசி) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதன்படி 1588 பட்டதாரி பயிற்சியாளர்கள் (பொறியியல்/தொழில்நுட்பம்), தொழில்நுட்ப வல்லுநர் (டிப்ளமோ) பயிற்சியாளர்கள், பொறியியல் அல்லாத பட்டதாரி பயிற்சியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


