தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்களை அவர்கள் தயார் செய்யாமல் வெளியே தனியார் ஏஜென்சிகளிடம் கொடுத்து தயார் செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி (TNPSC) மீது குற்றச்சாட்டுகள் :-
அரசு வேலையை கனவாக கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) நிர்வாகம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு மும்முரமாக படித்து வருகின்றனர். ஆனால், “அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிர்வாகமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இருப்பதாக” தேர்வர்கள் எப்போதும் குற்றச்சாட்டி வருகிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் மீது முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்னவென்றால் வினாத்தாள்கள் குளறுபடி, கேட்கப்படும் வினாக்கள் சரியாக இல்லை, தேர்வர்களை குழப்ப வேண்டும் என்பதற்காகவே வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
தனியார் ஏஜென்சி தான் எல்லாமே!
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தான் தனது அலுவலகத்தில் வைத்து வினாத்தாள்களை ஒரு குழு அமைத்து தயார் செய்கிறார்கள் என்று தேர்வர்கள் நினைத்து வருகிறார்கள். ஆனால் இந்த வினாத்தாள்கள் வெளியே தனியார் ஏஜென்சி மூலம் தயார் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விஷயம் என்னவென்றால், குரூப் 1, குரூப் 2 குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு வெளியே 4 தனியார் ஏஜென்சிகளிடம் வினாத்தாள்களை தயார் செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விடுவார்களாம். அவர்கள் தயார் செய்த 4 வினாத்தாள்களையும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், அதில் ஏதோ ஒரு வினாத்தாளை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை தமிழக முழுவதும் தேர்வு எழுதும் தேர்வுகளுக்கு கொடுத்து தேர்வுகளை நடத்துவார்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மனக்குமுறல்; கோரிக்கை
டிஎன்பிஎஸ்சி நடத்தும் இத்தேர்வுகளின் வினாத்தாள்கள் பல்வேறு குளறுபடியாக இருப்பதாகவும்; பல வினாக்கள் தவறாக இருப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்வர்கள் முன் வைத்தார்கள். கடந்த குரூப்-4 தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என போராட்டமும் அவர்கள் நடத்தினார்கள். இருப்பினும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்று தேர்வர்கள் புலம்புகிறார்கள்.
இந்த புது சர்ச்சை உட்பட எந்தவொரு குற்றச்சாட்டுகளுக்கும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தரப்பில் எந்தவொரு தெளிவான விளக்கமும், முழுமையான வெளிப்படைத் தன்மை இல்லை என்பது தேர்வர்களின் மனகுமுறல் ஆக உள்ளது.
மேலும் தவறான வினாக்களுடன்; தவறான மொழிபெயர்ப்புடன் தனியார் ஏஜென்சி மூலம் தயார் செய்யப்படும் வினாத்தாள் குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உரிய விளக்க அளிக்க வேண்டும் என அரசு பணியை கனவாக கொண்ட லட்சக்கணக்கானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


