செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான்… சசிகலா பெருமிதம்

செங்கோட்டையன் தனது உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் தான் என்பது நிரூபித்துள்ளார் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அவரின் இந்த பேட்டிக்குப் பிறகு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்ததுபோல் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலக் கட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர். தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்களின் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.

அன்பு சகோதரர் செங்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது.

எனவே, திமுக என்ற தீயசக்தி நம்கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் நடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும். செறுக்கோடும் மிளிரும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று படுவோம், வென்று காட்டுவோம். நாளை நமதே! வெற்றி நிச்சயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்- அதிரடி காட்டிய எடப்பாடி பழனிசாமி!

கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கும் இடையே சில மாதங்களாக முட்டல், மோதல் நடந்து…

சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் சரத்குமார்?… அமித்ஷாவுடன் நேரில் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக நிர்வாகியான நடிகர் சரத்குமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்ல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *