கமல்ஹாசன் பட வசூலை முறியடித்த ரஜினியின் ‘கூலி’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான  ‘கூலி’ திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் வசூலை  மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாகார்ஜுனா, ஆமிர்கான், சௌபின் சாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இப்படம் இந்தியா முழுவதும் முதல் நாள் திரையரங்குகள் மூலம் ரூ.65 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல்களை வழங்கும் Sacnilk இணையதள தகவல்படி, முதல் நாளில் கூலி படம் 65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘கூலி’ உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வருகின்றன. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வசூல் குறித்து அறிவிக்கவில்லை.

‘கூலி’ படத்திற்கு முதல்நாள் வசூல் நல்ல தொடக்கம் என்றாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலான 76.2 கோடி ரூபாயை முறியடிக்கவிவ்லை. ஆனாலும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தின் வசூலான 37.5 கோடி, கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தின் முதல் நாள் வசூலான 6.4 கோடி ரூபாயை முறியடித்துள்ளது.

Related Posts

அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி!

சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி(51). இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில்…

இளையராஜா,வைரமுத்து பிரிவுக்கு யார் காரணம்?- போட்டுடைத்த கங்கை அமரன்!

இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு யார் காரணம் என்று இயக்குநர் கங்கை அமரன் கூறியுள்ளார். வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. இதன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *