அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி!

சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான கஸ்தூரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கஸ்தூரி(51). இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கஸ்தூரி, தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில், சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி பாஜவில் இன்று இணைந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளத்தில், நடிகை திருமதி.கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர். சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் தமிழ்நாடு பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

நடிகர் அபினய் காலமானார்… சோகத்தில் முடிந்த சாக்லேட் பாயின் வாழ்க்கை!

சென்னையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் இன்று காலமானார் அவருக்கு வயது 44. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் அபினய். அதனைத்தொடர்ந்து ஓரிரு படங்களிலும் நடித்தார். விஜய்யின் ‘துப்பாக்கி’ திரைப்படத்தில்…

வெள்ளை சட்டையில், மாஸ் லுக்’கில் ‘அரசன்’ : நடிகர் சிம்பு டிரெண்டிங்

வெள்ளைச் சட்டையில், படு மாஸ் லுக்’கில் தான் நிற்கும் புகைப்படங்களை, நடிகர் சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிகர் சிம்புவின், இந்த மாஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அரசன் ப்ரோமோ கலைப்புலி எஸ்.தாணு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *