காலியாகிறதா அதிமுக கூடாரம்?- திமுகவில் இணைகிறார் மைத்ரேயன்!

அதிமுக அமைப்புச் செயலாளரான மைத்ரேயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று சேர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையின் பிரபல மருத்துவரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முதலில் ஓபிஎஸ் அணியிலும், பிறகு இபிஎஸ் அணியிலும் இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸை சந்தித்ததால், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த ஜூன்9-ம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக மைத்ரேயன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இன்று காலை சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 21-ம் தேதி அதிமுகவில் இருந்து விலகி அன்வர்ராஜா திமுகவில் இணைந்தார். அதிமுகவைச்சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் ஆகியோர் திமுகவில் இணைந்தார். தற்போது மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளார். தொடர்ந்து பலர் திமுகவில் இணைந்து வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை- ஷாக் கொடுத்த நாகர்கோவில் மாணவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து பட்டம் பெறுவதை தவிர்த்து விட்டு பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நாகர்கோவிலை சேர்ந்த மாணவி பட்டம் பெற்ற நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாடு…

வீர வசனம் பேசும் மு.க.ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்?- இபிஎஸ் கேள்வி

வீர வசனம் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *