காலியாகிறதா அதிமுக கூடாரம்?- திமுகவில் இணைகிறார் மைத்ரேயன்!

அதிமுக அமைப்புச் செயலாளரான மைத்ரேயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று சேர உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையின் பிரபல மருத்துவரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முதலில் ஓபிஎஸ் அணியிலும், பிறகு இபிஎஸ் அணியிலும் இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸை சந்தித்ததால், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, கடந்த ஜூன்9-ம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக மைத்ரேயன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இன்று காலை சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 21-ம் தேதி அதிமுகவில் இருந்து விலகி அன்வர்ராஜா திமுகவில் இணைந்தார். அதிமுகவைச்சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் ஆகியோர் திமுகவில் இணைந்தார். தற்போது மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளார். தொடர்ந்து பலர் திமுகவில் இணைந்து வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Posts

தூய்மை பணியாளர்களின் மாண்பை திராவிட மாடல் அரசு விட்டுக்கொடுக்காது- மு.க.ஸ்டாலின்!

தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என…

நள்ளிரவில் கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் நக்சலைட்டுகளா?- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *