சர்ச்சை…. ஆர்எஸ்எஸ் தலைவர் பெயரில் 2 வாக்காளர் அடையாள அட்டை

திருச்சூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் கே.ஆர்.ஷாஜி இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவில், மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன. அதேபோல பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில், கடந்த மக்களவை தேர்தலில் 48 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று போனார்கள். அந்த தொகுதிகளிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளது. பெங்களூரு மத்திய தொகுதியை போல், போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் கே..ஆர்.ஷாஜிக்கு இரண்டு வாக்குகள் உள்ளதாக அவரது அடையாள அட்டைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாரதிய சிச்சார கேந்திரத்தின் முன்னாள் நிர்வாகியும், ஆர்எஸ்எஸ் தலைவருமான கே.ஆர்.ஷாஜியிடம் இரண்டு வாக்காளர்அடையாள அட்டைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு இரண்டு வாக்காளர் அட்டைகள் எப்படி கிடைத்தது என்று தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும் என்று கே.ஆர்.ஷாஜி கூறினார். இரண்டு எண்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது கடுமையான குற்றமாகும். எனவே, கேரளாவில் இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

Related Posts

ஆக.19-ம் தேதி தான் கெடு- தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிஹார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆக.19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஹாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்…

மருத்துவமனை 3வது மாடியில் பயங்கர தீ- செவிலியர்கள் செய்த காரியம்!

மத்தியப்பிரேதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 9 நோயாளிகளை செவிலியர்கள் காப்பாற்றியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம்  டாமோவில் மாவட்ட மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மூன்றாவது மாடியில் பொது வார்டு உள்ளது. நேற்று மாலை திடீரென…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *