
விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டியதாக சாட் முன்னாள் அதிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், 15 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா நாடான சாட்டின் முன்னாள் பிரதமர் சக்ஸஸ் மஸ்ரா(41). இவர் தற்போது எதிர்கட்சியான லெஸ் டிரான்ஸ்பார்மேட்டர்ஸ் கட்சியின் தலைவராக உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அரசுக்கு எதிராக நடந்த கலவரத்தில் அதிபர் இட்ரிஸ் டெனி இட்னோ கொல்லப்பட்டார். இதனால் அவரது மகன் மஹாமத் டெரி ஆட்சியைக் கைப்பற்றினார். இந்த ஆண்டின் துவக்கத்தின் நாட்டின் அதிபர் பதவியை சட்டப்பூர்வமாக மாற்றினார். இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக அதிபர் மஹாமத் டெரியை, எதிர்க்கட்சி தலைவரான மஸ்ரா, கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், லோகோன் ஆக்சிடென்டல் பகுதியில் கடந்த மே மாதம் விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் இருதரப்பைச் சேர்ந்த 35 பர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு தலைநகர் என்ஜாமினாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் குற்றச்சாட்டு உறுதியானதால் முன்னாள் அதிபர் சக்ஸஸ் மஸ்ராவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சுமார் ரூ.15 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மஸரா, இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமருக்க 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் சாட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.