இடி, மின்னலுடன் 24 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

தமிழ்நாட்டில் பாமக தலைமையில் புதிய அணியா?- அன்புமணி பேச்சால் குழப்பம்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில்  பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி…

திமுகவில் புதிய பொறுப்பு- அன்வர் ராஜாவுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்!

திமுகவில் சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவிற்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதிமுவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா, பாஜகவை ஆரம்ப முதலே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதன் காரணமாக கடந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *