
வீடு கட்ட வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தனது மூன்று மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தாஜ்(36). இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சமீபத்தில் 20 லட்ச ரூபாய் கடன் வாங்கி புதிய வீட்டினை கோவிந்தராஜ் கட்டியதாக கூறப்படுகிறது. வீடு கட்ட வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கோவிந்தராஜ் தவித்து வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த கோவிந்தராஜ், , தனது மகள்களான பிரக்திஷாஸ்ரீ (9), ரித்திகாஸ்ரீ (7), மற்றும் தேவஸ்ரீ ( 3) ஆகியோரை வெட்டிக் கொலை செய்தார். இதன் பின் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடைபெற்ற போது தனது மனைவி பார்வதி, மகன் அக்னீஸ்வரன் ஆகியோரை ஒரு அறையில் கோவிந்தராஜ் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த மங்களபுரம் போலீஸார் விரைந்து வந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுபபி வைத்தனர். கடன் தொல்லையால் தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்குமா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மூன்று மகள்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.