
நடைபயிற்சியின் போது லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று வழக்கம் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனினும் அவர் அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது வழக்கமான நடைபயணத்தின்போது லேசான தலைச்சுற்றல் உணர்ந்துள்ளார். அவரது அறிகுறிகளை ஆய்வு செய்வதற்கும், தேவையான நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.