மு.க.ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? : அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

நடைபயிற்சியின் போது லேசாக தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்வது அவரது வழக்கம். இன்று வழக்கம் போல அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனினும் அவர் அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது வழக்கமான நடைபயணத்தின்போது லேசான தலைச்சுற்றல் உணர்ந்துள்ளார். அவரது அறிகுறிகளை ஆய்வு செய்வதற்கும், தேவையான நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவும் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Related Posts

    மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஆக.13) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமேற்கு மற்றும் அதனை…

    கல்லறை திருநாளில் ஆசிரியர்கள் எப்படி தேர்வுக்குச் செல்வார்கள்? – ஈபிஎஸ் கேள்வி

    கல்லறை திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *