கொட்டித் தீர்க்கும் கனமழை: இன்று 7 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

‘டிட்வா’ புயல் எதிரொலியாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும்ட என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி வட்டார பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

“விஜய் எனது சக தோழர்!” – தவெகவில் இணைந்த சவுக்கு சங்கரின் நண்பர்

பிரபல டிஜிட்டல் பத்திரிகையாளரும், தற்போது சிறையிலுள்ள சவுக்கு சங்கரின் நண்பருமான பெலிக்ஸ் ஜெரால்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் சேனலில் அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார், பெலிக்ஸ் ஜெரால்டு.…

அதிவேகமாக வந்த ரயில் மோதி 8 யானைகள் பலி: மூடுபனி காரணமா?

அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு குட்டி யானை படுகாயமடைந்தது. அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாய்ராங்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சாங்ஜுராய் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக்கூட்டம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *