இஸ்ரேல் தாக்குதலில் இந்திய மாணவர்கள் காயம்… ஈரான் சொன்ன பகீர் தகவல்

இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளிந்திருக்கிறார் என்று தனக்கு தெரியும் எனவும், அவர் எளிதான இலக்கு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். அவரை கொல்லப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமேனி, ‘போர் தொடங்கி விட்டது’ என பதிவிட்டார். அதேபோல், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்திருந்தார்.
இதற்கிடையில், ஈரானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், இன்று 110 இந்திய மாணவர்களை ஈரானில் இருந்து அர்மேனியன் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையிலும் இந்தியா இறங்கியுள்ளது.

  • Related Posts

    நடிகர் விஜய்யை எதிர்த்து போட்டியா? – கேள்வியால் டென்ஷனான சீமான்

    விஜய்யை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று கூறினார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தொண்டர்கள் எனது தம்பி, தங்கைகள். அவர்கள் சின்னப்பிள்ளைகள் தானே? அவர்கள் பக்குவப்பட வேண்டும்.…

    அண்ணாமலைக்கு செக் வைக்கிறாரா நயினார் நாகேந்திரன்?… டெல்லிக்கு அவசர பயணம்

    அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *