
உத்தரபிரதேசத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த கும்பல், வீட்டக்குள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு விட்டு நிதானமாக படுத்து உறங்கி மறுநாள் பொறுமையாக தப்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
வீடு புகுந்து கொள்ளையடித்தோமா? தப்பி ஓடினோமா? என இல்லாமல் தற்போதெல்லாம் திருடர்கள் திருடப்போன இடத்தில் தூங்கி எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு நிதானமாக நடந்து செல்லும் புதுவிதமான ட்ரெண்ட் செட்டை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித பதற்றமோ, பயமோ, இல்லாமல் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது போல், திருடச் செல்லும் இவர்கள் கொடுக்கும் அலப்பறை போலீசாரையே சற்று கொதிப்படையத் தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங். இவர் தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று இருந்தார். இதை நோட்டம் விட்ட திருட்டுக்கும்பல் ஒன்று ஜென் நிலையில், லக்னோவில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அடிக்கிற வெயிலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீடு புகுந்து கொள்ளையடிக்க முடியாது என்ற மனநிலையில் இருந்த அந்த திருட்டுக்கும்பல் வீட்டுக்குள் நுழைந்ததும் ஏசியை போட்டு விட்டு ஆர அமர உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகியுள்ளனர்.