“அப்பறம் எனக்கு பசிக்கும்ல..” திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸை ஹாயாக ருசித்த திருடர்கள்!

உத்தரபிரதேசத்தில் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த கும்பல், வீட்டக்குள் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டு விட்டு நிதானமாக படுத்து உறங்கி மறுநாள் பொறுமையாக தப்பிச் சென்ற சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 
வீடு புகுந்து கொள்ளையடித்தோமா? தப்பி ஓடினோமா? என இல்லாமல் தற்போதெல்லாம் திருடர்கள் திருடப்போன இடத்தில் தூங்கி எழுந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு நிதானமாக நடந்து செல்லும் புதுவிதமான ட்ரெண்ட் செட்டை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித பதற்றமோ, பயமோ, இல்லாமல் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்வது போல், திருடச் செல்லும் இவர்கள் கொடுக்கும் அலப்பறை போலீசாரையே சற்று கொதிப்படையத் தான் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங். இவர் தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று இருந்தார். இதை நோட்டம் விட்ட திருட்டுக்கும்பல் ஒன்று ஜென் நிலையில், லக்னோவில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அடிக்கிற வெயிலுக்கு வேர்க்க விறுவிறுக்க வீடு புகுந்து கொள்ளையடிக்க முடியாது என்ற மனநிலையில் இருந்த அந்த திருட்டுக்கும்பல் வீட்டுக்குள் நுழைந்ததும் ஏசியை போட்டு விட்டு ஆர அமர உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆகியுள்ளனர்.

  • Related Posts

    28 ஆண்டுகளுக்குப் பின் ரீ – என்ட்ரி கொடுக்கும் டிஸ்கோ சாந்தி!

    28 ஆண்டுகளுக்குப் பின் புல்லட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்ட்டிற்கு டிஸ்கோ சாந்தி அடியெடுத்து வைத்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்ததின் மகளான டிஸ்கோ சாந்தி 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்து…

    இந்தியாவின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது- எச்சரிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்!

    நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *