“தபோது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நானே எதிர்பார்க்காத வாய்ப்புகள் கூட கிடைக்கும். அதற்காக பொறுமையாக காத்திருக்கிறேன்” என்று ‘அட்டகத்தி’ நடிகை நந்திதா கூறியுள்ளார்.

குமுதா ஹாப்பி அண்ணாச்சி..!
கன்னட நடிகையான ‘நந்திதா தாஸ்’ தமிழ், மலையாளம், கன்னடம் தெலங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் “அட்டகத்தி, இதற்கு தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா!, விஜய்யின் புலி” உள்ளிட்ட பல படங்களில்நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது நந்திதா தாஸ்க்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது கைவசம் ஓரிரு படங்கள் மட்டுமே உள்ளன.

நந்திதா பகிர்ந்த அனுபவங்கள்
இந்நிலையில் தனது சினிமா அனுபவங்களை நடிக்க நந்திதா ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் அதில் அவர் கூறியதாவது, “சினிமாவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஒரு படம் ஹிட் அடித்துவிட்டால் நான் தான் பெரிய ஆள் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. சினிமாவில் நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம் பொறுமை தான். நான் நடிக்க முடியாது என்று உதறித் தள்ளிய நிறைய படங்கள் வெற்றி பெற்றுள்ளன” என்பதை குறிப்பிட்டார்.
“ஆனால் அதற்காக வருத்தப்படவில்லை. முடிந்தது முடிந்தது தான், அதற்காக கவலைப்படுவது முட்டாள் தானம் என்றே சொல்லுவேன்” என்று விளக்கமளித்தார்.
மேலும், “தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நானே எதிர்பார்க்காத வாய்ப்புகள் கூட கிடைக்கும். அதற்காக பொறுமையாக காத்திருக்கிறேன்” என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

கிளாமர் நடிகையான நந்திதா
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில்,நடிகை நந்திதாவின் ‘கிளாமர்‘ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சினிமா வாய்ப்புகளை பெற கவர்ச்சியில் குதித்து விட்டார் நடிகை நந்திதா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.





