வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்- திருப்பதி தேவஸ்தான தலைவர் முக்கிய தகவல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆயிரம் கோயில்கள் கட்டப்பட உள்ளன. அனைத்து தேவஸ்தான கோயில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோயிலில் ரூ.37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகத்தைக் கட்டவும், மேலும் ரூ.3 கோடியில் ஒண்டிமிட்டாவில் ஒரு புனித வனத்தை அமைக்கவும்  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை  திருப்பதியில் தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் 10 நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமியை  தரிசனம் செய்ய முடியும். இந்த தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடியாக எத்தனை டோக்கன்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு வழங்கும் அறிக்கையை பொறுத்து இன்னும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.

Related Posts

திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *