தமிழ் பட வாய்ப்புகள் குறைந்ததாலும், பல படங்கள் பிளாப்பானதாலும் நொந்துபோன நடிகை நயன்தாரா திடீர் முடிவு எடுத்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகை நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் இயக்குநர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஜோடியாக 2005-ம் ஆண்டு ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பின் பல வெற்றி படங்களில் அவர் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக ரஜினிகாந்துடன் சந்திரமுகி, அண்ணாத்த, சூர்யாவுடன் கஜினி, சிம்புவுடன் வல்லவன், விஜய்யுடன் வில்லு, அஜித்துடன் பில்லா, விஸ்வாசம், விஷாலுடன் சத்யம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என அவர் நடித்த படங்கள் வசூலை அள்ளின. இதனால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கடந்த 22 வருடங்களாக பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், அண்மையில் அவர் தமிழில் நடித்த பல படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், அன்னபூரணி, O2 என வந்த படங்கள் எல்லாம் தோல்வியடைந்தன. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் தொடர்ச்சியாக மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்தார். இந்த படமும் ஓடவில்லை. இதன் பின் அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்தன. இந்த நிலையில், நயன்தாரா நடித்து ஓடிடியில் வெளியாகும் சில படங்கள் பார்வையாளர்களைக் கவரவில்லை. தமிழில் அறம் போல படங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த நயன்தாரவுக்கு தமிழில் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக கம்பேக் கொடுக்க நடிகை நயன்தாரா முடிவு செய்துள்ளார். இதனால் தெலுங்கில் நந்தமூரி பாலகிருஷ்ணாவுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ப்ரீ புரொடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவுடன் ஏற்கெனவே சிம்ஹா, ஸ்ரீராம ராஜ்யம், ஜெய் சிம்ஹா ஆகிய படங்களில் இணைந்து நயன்தாரா நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்ன. இதனால் புதிய பீரியடிக் படத்தில் நடிப்பதன் மூலம் பட வாய்ப்புகள் குவியும் நயன்தாரா எதிர்பார்க்கிறார்.


