டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இன்று விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்து நடந்த சில அடி தூரத்தில் பயணிகள் விமானம் நின்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானத்திலோ, தீப்பிடித்த பேருந்திலோ யாரும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டவுடன் விமான நிலைய காவலர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், அருகில் நின்ற விமானங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை’ என்று டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தில் தீ எப்படி பிடித்தது என விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


