இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு, “அஜித் ரூ.150 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக தயாரிப்பாளர் தரப்பில் குற்றச்சாட்டுகள்” எழுந்துள்ளது.
“குட்-பேட் அக்லி” தந்த வெற்றி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் – நடிகர் அஜித்குமார் கூட்டணியில் “குட் பேட் அக்லி” படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகைகள் திரிஷா, சிம்ரன் வில்லனாக அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் குறிப்பாக, அஜித் ரசிகர்களின் அமோக வரவேற்பால் இப்படம் வெற்றி பெற்றது.

மீண்டும் இணையும் ஆதிக்- அஜித் கூட்டணி
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக நடிகர் அஜித்குமார் நடிக்கும், #AK-64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் ஒன்று வெளியானது.
ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு எப்போது? என்று எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஸூட்டிங் எப்போது..? எப்போது..? என்று கேட்டு வருகிறார்கள்.

அதிக சம்பளம் கேட்கு அஜித்..?
நடிகர் அஜித்தின் படம் தள்ளிப் போவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவரின் சம்பளம் தான். நடிகர் அஜித் படம் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.160 கோடி வரை சம்பளம் கேட்பதாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் அஜித்குமார் “விடாமுயற்சி” முயற்சி படம் வரை 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்ததாகவும்; “குட்-பேட் அக்லி” படத்திற்குப் பிறகு ரூ.160 கோடி மேல் சம்பளம் கேட்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சம்பளத்தை குறைக்க வேண்டும்..!
நடிகர் அஜித்குமார் ஆனாலும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆனாலும் யார் நடித்தாலும்? படம் வெற்றி பெறலாம் அல்லது தோல்வி அடையலாம் எதுவாக இருந்தாலும் உச்ச நட்சத்திரங்கள் தனது சம்பளத்தை குறைப்பது நல்லது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


