மொந்தா புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டில் இன்று இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மொந்தா புயல் காரணமாக சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, புயல் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


