தமிழகம் உள்பட 25 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெரு நாய்கடி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (என்சிஆர்) உள்ள அனைத்து தெரு நாய்களைக் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றினார். இதையடுத்து 3 நீதிபதிகள் அமர்வு தெரு நாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்தது. கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை, புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திய பின்னா், பிடிக்கப்பட்ட இடங்களிலேயே மீண்டும் அவற்றை விடுவிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்தது.

மேலும் நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற 3 நீதிபதிகள் அமர்வு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்து, நெரு நாய்கள் பிரச்சனை குறித்து அனைத்து மாநிலங்களுக்கு பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27) காலை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *