பிரபல பாடகர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருந்து துபாய்க்கு ஸ்ரீலங்கன் விமானம் பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இலங்கையின் பிரபல பாடகரான சாமர ரணவக்க ஏறச்சென்றார். அப்போது அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை விமானத்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர். இதனால் விமானப் பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களுடன் பாடகர் சாமர ரணவக்க கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் விமானத்தில் பாடகர் சாமர ரணவக்கவை அனுமதிக்க முடியாது என்று விமானத்தின் தலைமை விமானி முடிவெடுத்தார். இதுகுறித்து உடனடியாக அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் விமானத்தில் இருந்து பாடகர் சாமர ரணவக்க வலுக்கட்டாயமாக பணியாளர்களால் வெளியேற்றப்பட்டதுடன் காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்திய போது பாடகர் சாமர ரணவக்க அதிக மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவரை எச்சரித்து வீட்டுக்குச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


