“தோசா கிங்” என்ற பெயரில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது. அண்ணாச்சி கேரக்டரில் தவெக பொதுச்செயலாளர் ‘புஸ்ஸி ஆனந்த்’ மிக பொருத்தமாக இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்ணாச்சியின் கதை படமாகிறது:-
“ஜெய் பீம்” படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் அடுத்ததாக சரவணபவன் நிறுவனரான ராஜகோபால் அண்ணாச்சி வாழ்கையை மையமாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். “டைம்ஸ் குழுமத்தின் ஜங்லீ பிக்சர்ஸ்” இந்தப்படத்தை தயாரிக்கிறது.
ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதைக்கான சட்டப்பூர்வ உரிமைகளை ஜங்லீ பிக்சர்ஸ் பெற்றுவிட்டதால், உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட இந்த சொல்லப்படாத கதை எப்படியும் திரைக்கு வந்தே தீரும் என்கிறார்கள்.

ஜீவஜோதி – அண்ணாச்சி
இந்தப் படத்தில் ஜீவஜோதி – ராஜகோபால் அண்ணாச்சி இருவரின் வாழ்க்கையும்; இருவருக்கும் இடையே என்ன நடந்தது போன்ற உண்மை நிகழ்வுகளையும் இந்த படத்தில் அப்படியே கொண்டு வர இயக்குநர் திட்டமிட்டுள்ளார்.
விலகிய மோகன் லால்
இந்தப் படத்தில் சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சியாக முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் “மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால்” தான். அவரும் ஒப்புதல் தெரிவித்தார். பிறகு ஒரு சில காரணங்களால் படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன்பிறகு சரத்குமார், சத்யராஜ் என மாறிக்கொண்டே வருகிறது. அண்ணாச்சி கேரக்டருக்கு சரியான நடிகர் இன்னும் தேர்வாகவில்லை.

புஸ்ஸி ஆனந்த் தான் சரி:-
இப்படத்தில் அண்ணாச்சி கேரக்டருக்கு மிகப் பொருத்தமான நபர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, இல்லையென்றால் வெள்ளை பேண்ட், நெத்தியில் விபூதி, ஆன்மிகவாதி, உயரம் குறைவாகவும், குண்டான தோற்றத்திலும் இருப்பவர் இதுதான் சரவணபவன் அண்ணாச்சி. இந்த எல்லாமே மிகவும் பொருத்தமாக இருக்கும் நபர் “புஸ்ஸி ஆனந்த்” என்று கோலிவுட் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
எந்த நடிகரும் அண்ணாச்சி கேரக்டருக்கு நடிக்க ஒப்பந்தம் ஆகாத பட்சத்தில் புஸ்ஸி ஆனந்த் கூட நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


