மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன் -படம் வெல்லட்டும்!” என நடிகரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வரவேற்புடன்; பைசன் காளமாடன்
தீபாவளி பண்டிகையொட்டி இன்று உலகம் முழுவதும் இயக்குநர் மாரி செல்வராஜின் “பைசன் காளமாடன்” படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கிராமத்துக் கபடி வீரராக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகைகள் நடிகரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் “பைசன் காளமாடன்” படத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் வாழ்த்து செய்தி
இது குறித்து, அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது “பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்…” என்று பாராட்டி உள்ளார்.
மேலும், “படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும். என் வாழ்த்துகள் பைசன் – காளமாடன் வெல்லட்டும்..!” என்று உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“பைசன் காளமாடன்” படத்திற்கு போட்டியாக ஹரிஷ் கல்யாணின் டீசல்; பிரதீப் ரங்கநாதனின் “ட்யூட்” ஆகிய படங்களும் வெளியாகி உள்ளது குறிப்பிட்டுத்தக்கது.


