மதுரை பெண் மேயர் திடீர் ராஜினாமா..! அமைச்சர் மூர்த்தி ஆதரவாளருக்கு அடுத்த வாய்ப்பா?

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், அடுத்த மேயர் பதவிக்கான வாய்ப்பு அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாநகராட்சியில் நடந்த மெகா ஊழல்!

மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டிடங்கள் நிறுவனங்கள் ,மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தியபோது 2022- 2023ஆம் ஆண்டுகளில் ரூ.150 கோடிக்கு மேல் வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.

முறைகேடு நடந்தது எப்படி..?

இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்த நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது .

விசாரணை ஆரம்பம்!

இதுகுறித்து தற்போதைய மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.


இராஜினாமா செய்த மண்டல தலைவர்கள்:-

மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான “வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி” ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர்.

மேயர் கணவர் கைது:-

வரி முறைகேடு தொடர்பாக முதல் குற்றவாளியாக மாநகராட்சி மேயர் கணவர் பொன்வசந்த் மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மேயர் திடீர் ராஜினாமா;-

இந்நிலையில் மேயர் இந்திராணி தனது குடும்ப சூழல் காரணமாக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயனிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

துணை மேயரிடம் ஆலோசனை :-

இதையடுத்து மேயர் இந்திராணி வழங்கிய ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக துணை மேயர் நாகராஜன் தலைமையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆணையாளர் சித்ரா விஜயன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்து மேயர்?

இருந்த போதிலும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்து வந்த மேயர் இந்திராணி ராஜினாமா செய்த நிலையில் அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஏற்கனவே ராஜினாமா செய்த மண்டலம் 1ன் மண்டல தலைவரான வாசுகி சசிகுமாருக்கு மேயர் பதவி வழங்குவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *