லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா- சமந்தா நடிப்பில் வெளியான “அஞ்சான்” படம், புதிதாக எடிட் செய்யப்பட்டு நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.

அஞ்சான் அடைந்த தோல்வி :-
கடந்த 2014ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான படம் தான் “அஞ்சான்”. இந்தப் படத்திற்கு போட்டியாக பார்த்திபனின் “கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்” படமும் வெளியானது. இருப்பினும், “அஞ்சான்” படம் வணிக ரீதியாகவும்; விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

அதற்கு காரணம் இயக்குநர லிங்குசாமி கொடுத்த அதிக எதிர்பார்ப்பு தான்.
மிகக்குறிப்பாக, பட வெளியிட்டிருக்கு முன் இயக்குநர் லிங்குசாமி “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இந்த படத்தில் இறக்கி இருக்கேன். நிச்சயம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அஞ்சான் படம் இருக்கும்…” என்று அவர் கூறியிருந்தார். இதனால், உற்சாகமடைந்த சூர்யா ரசிகர்கள் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் லிங்குசாமி மீது கடும்கோவம் அடைந்தனர்.

கவர்ச்சிக்கு தாவிய சமந்தா :-
இந்த படத்தில் தான், நடிகை சமந்தா கவர்ச்சிக்கு தாவினார். இப்படத்தில் பாடல் காட்சிகளில் நடிகை சமந்தா படுகவரச்சியாக நடித்து, நடனமாடி ரசிகர்கள் மத்தியில், பிரபலமானார்.

அஞ்சான் ரீ-ரிலீஸ்
இந்நிலையில், அஞ்சான் படம் புதிதாக எடிட் செய்யப்பட்டு அடுத்த மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்படும் படத்தில் என்ன இருக்கிறது? என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்


