“மை டியர் சிஸ்டர்” படத்திற்காக கஷ்டப்பட்டு நெல்லை பாஷை பேசிப் பழகிதாக நடிகை மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.
அக்காவுக்கும், தம்பிக்கும் இடையேயான மோதல் தான் ‘மை டியர் சிஸ்டர்’ படத்தின் ஒன்லைன். ஆணாதிக்கம் கொண்ட தம்பிக்கும்; பெண்ணியம் பேசும் அக்காவுக்கும் இடையே ஏற்படும் மோதல், ஈகோ என இதைவைத்து தான் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நெல்லை பாஷை பேசிய நடிகை :-
படம் முழுவதும் திருநெல்வேலி மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகை மம்தா மோகன்தாஸ் திருநெல்வேலி பாசை கற்றுக் கொண்டு பேசியுள்ளார்.

படக்குழு விவரங்கள்:-
அருள்நிதி, மம்தா மோகன்தாஸ், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம், ‘மை டியர் சிஸ்டர்’. இதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
விரைவில் டீசர்!
இப்படத்திற்கான படைப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், “மை டியர் சிஸ்டர்” படத்திற்கான டீசர்; பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது


