வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் சாய் சதுர்சன் சதம் அடிப்பதற்கு மிக நெருங்கி சென்று அவுட் ஆகி வெளியேறினார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே ஆன டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்தது.

இதற்கு அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி தனது 7வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தமிழுக வீரர் சாய் சுதர்சன் 87 ரன்கள் அடித்து அவுட் ஆனார். சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டa சாய்சுதர்சன் வெறும் 13 ரன்கள் மீதமுள்ள போது அவுட் ஆனது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும், 2வது இன்னிங்ஸில் சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.


