ஒரே நாளில் 2 சாதனை மைல்கற்களை எட்டிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

களிர் கிரிக்கெட் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டில் 2 உலக சாதனை படைத்துள்ளார்.

ஸ்ருதி மந்தனா

சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவை போல் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா பிரபலம். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இடம்பெற்று பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.


உலக்கோப்பை தொடரில் அசத்தல் :-

தற்போது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா விளையாடி வருகிறார். மேலும், அவர் மகளிர் உலக மகளிர் கோப்பைத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை மோதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சாதனைகள் பலவற்றைப் படைத்து இந்தியாவிற்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தார்.


சாதனை மைல்கற்கள் :-

இந்த ஆட்டத்தில், ஸ்மிருதி மந்தனா 2 முக்கிய சாதனை மைல்கற்களை எட்டினார். 2025ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்து, மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீராங்கனை ஆனார்.

மேலும் 5,000 ஒருநாள் ரன்களைக் கடந்த மிக இளம் வயது மற்றும் அதிவேகமான வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.