குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
7 வயது முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் 6 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
கட்டணங்களுக்கான தள்ளுபடி இந்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும்,இந்த நடைமுறை ஒரு வருடம் அமலில் இருக்கும் என்றும் ஆதார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இளைஞர்கள், முதியோர்களுக்கான ஆதார் கட்டணம் வழக்கம் போல் அதே கட்டணங்களில் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதார் சேவை கட்டணங்கள் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


