‘கோல்ட்ரிஃப்’ சிரப்பை பயன்படுத்தாதீர்கள்… தமிழக அமைச்சர் வேண்டுகோள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் கடந்த மாதம் 11 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான ஆய்வுகள் அந்த குழந்தைகள் இறப்புக்கு கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பும் காரணமாக கூறப்பட்டது. மேலும் உயிரிழந்த குழந்தைகளுக்கு நடந்த உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் டிஎதிலேனே கிளைகோல் எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு சம்பவங்களுக்கு இருமல் சிரப்புகளில் பிரேக் ஆயில் கரைப்பான் கலந்ததே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 11 குழந்தைகளின் உயிரிழப்பைக் கவனத்தில் கொண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பு தயாரிக்கும் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீசன் பர்மா என்ற மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. உணவு பாதுகாப்புத் துறை தரப்பில் நடத்திய ஆய்வில், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் அதகளவில் டைஎதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோல்ட் ரிஃப் இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

  • Related Posts

    திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை…5 பேர் கைது!

    திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (25).இவர் கன்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார்…

    போலி வாக்காளர்கள்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *