குலசை தசரா திருவிழா 2025 : வரலாறும், சிறப்புகளும்

குலசை தரசா திருவிழா தமிழகத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாக்களில் முக்கியமான ஒன்று. அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன், கலை நிகழ்ச்சிகள், நாடகம், தெருக்கூத்து, அன்னதானம் என கோலாக்கலமாக குலசை தசரா திருவிழா நடைபெறும்.

மைசூர் நகர தசரா திருவிழா தான் இந்தியாவில் ஆடம்பரமான திருவிழாக்களில் மிக முக்கியமான ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் மைசூர் நகரில் கூடி தசரா பண்டிகையை கோலகாலமாக கொண்டாடுவார்கள். அதற்கு அடுத்தபடியாக இருப்பது குலசை தசரா திருவிழா தான்.

குலசேகரப்பட்டினம் சிறப்பு:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி போகும் வழியில் சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் குலசேகரப்பட்டினம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள்.

 

கோவிலின் சிறப்புகள்:-

குலசை தசராவின் சிறப்பம்சமே, திருவிழாவின் போது பலரும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனை வழிபடுவதுதான். பலர் பல வகையான வேஷங்களைப் போட்டுக்கொண்டு வந்தாலும், காளி வேஷம் போட்டுக்கொண்டு வருபவர்கள் தான் அதிகம்.

கிரகங்கள் சொல்லும் விசயம்:-

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் செவ்வா யும் இருந்தால் அதை `பரிவர்த்தனை யோகம்’ என்று சொல்வார்கள். அதே போல இங்கு சுவாமியின் சக்தியை அம்பாள் வாங்கியிருப்பதால் தான், அம்பாள் சிவமயமாகக் காட்சியளிக்கிறாள். அம்பாளின் சக்தியை சுவாமி வாங்கியிருக்கிறார். அதனால்தான் இங்கு சுவாமி சக்தி மயமாகக் காட்சியளிக்கிறார். இதை ’பரிவர்த்தனையோக நிலை’ என்பார்கள். இதனால்தான் இங்கு அம்பாளின் ஆட்சியே மேலோங்கி இருக்கிறது”.

குலசை ஐதீகம் :-

கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம். பல பக்தர்கள் திருச்செந்தூருக்கு சென்று அங்கே கடலில் நீராடி முருகன் விழாக்களில் பங்கேற்கிறார்கள். குலசை தசரா திருவிழா ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தையொட்டி கொண்டாடப்படும் தசரா திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்றது.

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று விமரிசையாக நள்ளிரவு நடைபெற்றது. குலசேகரன்பட்டிணம் ஊரை சுற்றியுள்ள உடன்குடி, தாண்டவன்காடு, காயல்பட்டிணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தசரா திருவிழா களைகட்டியுள்ளது.

குலசை பக்தர்களின் வேண்டுதல்:-

விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தாங்கள் விரும்பிய வேடங்களான காளி, அம்மன், ராஜா ராணி, குறவன் குறத்தி, காமாட்சி மீனாட்சி, பத்ரகாளி, அனுமன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். வேடமணிந்த பக்தர்கள் குழுவாகவும் தனியாகவும் வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று வருகின்றனர்.

சினிமா நடிகைகள் நடிகர்களின் நடன நிகழ்ச்சிகள்:-

கடந்த 10 ஆண்டுகளாக குலசை தசரா திருவிழாவில் பக்தர்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுவது சினிமா, சின்னத்திரை பிரபலங்களின் நடன நிகழ்ச்சிகள் தான். சினிமாவில் இருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்கள், சின்ன,சின்ன நடிகைகள் சீரியல், டிவி தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகைகள், நடிகர்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்று நடனம் ஆடுவது வழக்கம்.

 

மேலும் சினிமா பாடகர்கள் கூட விழாவில் பங்கேற்று ஆன்மீகப் பாடல்களை பாடுவார்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை அலியா மானஷா, நடிகை தர்ஷா குப்தா என பர நடிகைகள், நடிகர்கள் குலசை தசரா விழாவில் நடனமாடிய பிறகு சினிமாவில் புகழ்பெற்றார்கள் என்று மக்கள் மத்தியில் பேசப்படுவதும் உண்டு.

வெளி மாநிலத்தவர்கள்; வெளிநாட்டவர் வருகை

நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இந்தக் குலசை திருவிழாவில் பங்கேற்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா என வெளி மாநிலங்கள் உட்பட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

Related Posts

திருச்செந்தூர் போறீங்களா?…கடற்கரையில் இரவு இனி தங்க முடியாது!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி…

தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்கு செல்லாது…திடீர் அறிவிப்பின் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகள் செல்லாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *