சுந்தர்.சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன்- 2” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் ஐசரி கணேசன் தயாரிப்பில், நடிகை நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான படம் “முக்குத்தி அம்மன்”. இந்த படம் வெளியான போது, கொரோனா காலம் என்பதால் இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்; விமர்சனங்களையும் பெற்றது.

“மூக்குத்தி அம்மன்-2” ரெடி :-
இதனை அடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேசன் “மூக்குத்தி அம்மன் 2” படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் இந்த முறை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக சுந்தர்.சி இப்படத்தை இயக்குகிறார். இதில் அம்மன் பாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார் என்றும் அறிவிப்பு வெளியானது. இசை ‘ஹிப்பாப் அதி’

இத்தனை நடிகைகளா..?
மேலும், ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த பான் இந்தியா படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, மீனா, குஷ்பு, சிங்கம் புலி மற்றும் கன்னட நடிகர் துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு “மூக்குத்தி அம்மன்-2” படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


