நடிகர் தனுஷ்டன் அம்பிகாபதி படத்தில் நடித்த சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவில் வயதான பின்பு தான் நடிகர், நடிகைகள் பலர் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் வயது கடந்த பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது. தற்போது அப்படித்தான் 40 வயதான ஒரு நடிகை, இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாலிவுட் நடிகை சோனம் கபூர் தான். இவரது தந்தை இந்தி திரையுலகின் பிரபல நடிகர் அனில் கபூராவார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆனந்த் அவுஜா என்பவரை சோனம் கபூர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2022-ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சோனம் கபூர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் நடிகர் தனுஷ் நடித்த அம்பிகாபதி ( இந்தியில் ராஞ்சனா) படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இந்தியில் தனுஷ் பிரபலமானார். தற்போது 40 வயதில் சோனம் கபூர் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருப்பதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


