தேவாலயத்திற்குள் லாரியுடன் புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில், மோர்மன் தேவாலயம் உள்ளது. அங்கு நேற்று நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டில் இருந்தனர். அப்போது திடீரென லாரியுடன் ஒருவர் தேவாலயத்திற்குள் புகுந்தார். அப்போது அவர் திடீரென துப்பாக்கியால் சுட்டவர் தேவாலயத்திற்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். மர்மநபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டத்தில் நான்கு பேரில் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் போலீஸார், எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுட்ட நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பர்ட்டனைச் சேர்ந்த
தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்டு என்ற 40 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ” கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்” என்று குற்றம் சாட்டினார். துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், எல்டிஎஸ் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தீ விபத்து மோசமானது என்றும், முழு டிரம்ப் நிர்வாகமும் இந்த சம்பவத்தை கண்காணித்து வருவதாக சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.


